ஜெயலலிதா பிறந்த நாள் விழா டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடந்தது


ஜெயலலிதா பிறந்த நாள் விழா டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 25 Feb 2018 4:00 AM IST (Updated: 25 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெய லலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மன்னார்குடி தரணி மெட்ரிக் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தினகரன் அணி திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தொடங்கிவைத்தார். முகாமில் டி.டி.வி.தினகரன் அணி ஒன்றிய செயலாளர் அசோகன், வக்கீல் சரவணசெல்வன், சேரன்குளம் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வீரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து வந்த மருத்துவகுழுவினர் ரத்ததானத்துக்கான மருத்துவ பணிகளை செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம் கடைத் தெருவில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா டி.டி.வி. தினகரன் அணியின் சார்பில், திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் உத்தரவின் பேரில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்.வி.ஆர்.பிரசன்னா தலைமை தாங்கினார். அப்போது ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கச்சனம் மகாமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோமல் சுரேஷ், கச்சனம் தூரையன், கச்சனம் சரபோஜி டீ ஸ்டால் ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி கீராந்தி ராமகிருஷ்ணன், கச்சனம் வெங்கடேசன், ஆலத்தம்பாடி சரோஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story