அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2018 4:00 AM IST (Updated: 25 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்தும், கட்சி கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இதேப்போல புதுக்கோட்டை நகர அ.தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். புதுக்கோட்டை சாந்தநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை நகர செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். தொடர்ந்து காதுகேளாதோர் பள்ளி, பார்வை இழந்தோர் பள்ளி, ஆதரவற்றோர் பள்ளி குழந்தைகளுக்கு சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கந்தர்வகோட்டை ஆபத்துசகாயர் கோவிலில் உள்ள ஆபத்துசகாயர், அன்னை அமராவதி, முருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது.

இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தார், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், அரசு ஒப்பந்ததாரர் கண்ணுக்குடிப்பட்டி ஆனந்தகுமார், ஒன்றிய நிர்வாகிகள் பெரியசாமி, குமார், மாரிமுத்து, பவுன்ராஜ், கே.எம்.கே.முத்து, பூபதி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் கடைவீதியில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவிற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய செயலாளர் கூத்தையா தலைமை தாங்கினார். இதையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story