மன்னை எக்ஸ்பிரசை தஞ்சை வழியாக தொடர்ந்து இயக்க வலியுறுத்தி ரெயில்களை சிறைபிடிக்கும் போராட்டம்
மன்னை எக்ஸ்பிரசை தஞ்சை வழியாக தொடர்ந்து இயக்க வலியுறுத்தி 4 இடங்களில் ரெயில்களை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்.எல்.ஏ. உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை, கும்பகோணம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் வருகிற 1–ந்தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயில் தஞ்சைக்கு வராது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து தஞ்சை வழியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு கட்சிகள், பொது நல அமைப்புகள் சார்பில் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வழியாக தொடர்ந்து இயக்க வேண்டும். இல்லையென்றால் தஞ்சையில் இருந்து சென்னைக்கு தனி ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ரெயில்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தஞ்சை ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கட்சியினர், பொதுநல அமைப்பினர் திரண்டனர்.
பின்னர் அவர்கள் முன்னாள் எம்.பி. சிங்காரவடிவேலு தலைமையில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டசெயலாளர் நீலமேகம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி ஆகியோர் முன்னிலையில் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தஞ்சை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், நகர செயலாளர் நீலமேகம், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சண்.ராமநாதன், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் நாஞ்சி.வரதராஜன், தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், நிர்வாகிகள் கோவி.மோகன், கோவிந்தராஜ், சீத்தாராமன், வணிகர் சங்கங்களின் பேரவை நகர தலைவர் வாசுதேவன், மூத்த குடிமக்கள் பேரவை மாவட்ட தலைவர் ஆதி.நெடுஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதே போல் பூதலூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய இடங்களிலும் ரெயில்களை சிறைபிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதில் பாபநாசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் 2 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 85 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story