விழுப்புரம் ரெயில் நிலையத்தை பராமரிக்க வேண்டும்
விழுப்புரம் ரெயில் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு திருச்சி கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதய்குமார்ரெட்டி நேற்று திருச்சியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் ரெயில் நிலைய நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பயணிகள் தங்கும் ஓய்வறையை பார்வையிட்டார்.
அப்போது அவரிடம், விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள கழிவறைகளை பராமரிப்பதில்லை என்றும் நடைமேடைகளில் கடை வைத்திருப்பவர்களின் வியாபாரத்தை பாதிக்காத வகையில் ரெயில் வரும் சமயங்களில் குடிநீர் வால்வுகளை மூடிவிடுவதாகவும், பின்னர் ரெயில் சென்றதும் குடிநீர் வால்வுகளை திறந்து விடுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினார்கள்.
மேலும் ரெயில் நிலைய வளாகங்களில் இரவு நேரங்களில் சிலர் மது குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை அப்படியே போட்டுவிட்டு செல்வதால் பயணிகளுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாகவும், ரெயில் நிலைய வளாகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.
இதை கேட்டறிந்த கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி, ரெயில் நிலையம் முழுவதையும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்க பயணிகளுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story