12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பியடித்த 43 மாணவர்கள் பிடிபட்டனர்
மராட்டியத்தில் எச்.எஸ்.சி. எனப்படும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.
நாசிக்,
நாகிக் மண்டலத்திற்கு உட்பட்ட நாசிக், துலே, ஜல்காவ் மற்றும் நந்தூர்பர் மாவட்டங்களை சேர்ந்த 226 தேர்வு மையங்களில் சுமார் 1 லட்சத்து 68 ஆயிரத்து 220 மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
தற்போது மொழி பாட தேர்வுகள் நடந்துவரும் நிலையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க சிறப்பு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் அல்லாமல் கேமரா மூலமும் தேர்வு எழுதும் மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஜல்காவ் மற்றும் துலே மாவட்டங்களில் மட்டும் 43 மாணவர்கள் காப்பியடித்து பறக்கும் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்களின் 21 பேர் துலே மாவட்டத்தையும், 22 பேர் ஜல்காவ் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story