மாவட்ட செய்திகள்

சாப்டூர் வனப்பகுதியில் வறட்சி: தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் வாகனம் மோதி சாவு + "||" + Vehicle collision deer death who was searching water

சாப்டூர் வனப்பகுதியில் வறட்சி: தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் வாகனம் மோதி சாவு

சாப்டூர் வனப்பகுதியில் வறட்சி: தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் வாகனம் மோதி சாவு
சாப்டூர் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் வாகனத்தில் சிக்கி உயிர் இழந்தது.
பேரையூர்,

பேரையூர் அருகே சாப்டூர் வனப்பகுதிகளான தேக்கமலை, கவரிமலை ஆகிய பகுதிகளிலும் கண்மாய்களில் உள்ள முட்புதர்களிலும் ஏராளமான மான்கள் குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றன. இந்த பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் புகும் நிலை உள்ளது.


தண்ணீர் தேடி வரும் மான்கள் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது வாகனங்களில் சிக்கி உயிர் இழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நேற்று அதிகாலை எம்.சுப்புலாபுரம் அருகே 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் சாலையை கடந்தபோது அந்தப்பக்கமாக வந்த வாகனம் மோதி இறந்து போனது. மானை பலிகொண்ட வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

டி.கல்லுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலினி சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சாப்டூர் வனச்சரகர் பொன்னுச்சாமிக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து மானின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைக்கப்பட்டது.

இந்த பகுதியில் அதிக அளவில் மான்கள் வசிப்பதால் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியகூறுகள் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.