மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் + "||" + DMK in protest of tomorrow Attendance

சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும்
திருவாரூர் - தஞ்சை சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் தி.மு.க. நகர கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சித்தமல்லி சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், கலைவாணி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை எழுச்சியுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. மாநாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மேலும் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க., வர்த்தக-சேவை அமைப்புகள் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக நகர செயலாளர் வாரைபிரகாஷ் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா நன்றி கூறினார்.