திருக்கோவிலூர் அருகே பள்ளிக்கூட மாணவன் கொலை
திருக்கோவிலூர் அருகே பள்ளிக்கூட மாணவன் கொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி ஆராயி(வயது 45). இவர்களுக்கு பாண்டியன் (25), சரத்குமார் (22), விஜயகுமார் (19), சமயன்(8) ஆகிய 4 மகன்களும், அஞ்சலாட்சி (17), தனம் (15) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ஏழுமலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பாண்டியன், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரும் பெங்களூருவில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.
அஞ்சலாட்சி திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஆராயி தனது இளைய மகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வெள்ளம்புத்தூரில் தங்கி உள்ளார். தனம் தேவனூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், சமயன் அதேஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கடந்த 21-ந்தேதி இரவு ஆராயி வழக்கம்போல் வீட்டில் இருந்த தனது 2 குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் தூங்கி கொண்டிருந்த 3 பேரையும் இரும்புக்கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அதையடுத்து அவர்கள் 3 பேரும் இறந்து விட்டதாக எண்ணி அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இந்த தாக்குதலில் சமயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுயநினைவு இன்றி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய ஆராயி, தனம் ஆகிய 2 பேரையும் மீட்டுசிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு இதுவரை நினைவு திரும்பவில்லை. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சமயன் உடல் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நல ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், சென்னை தேசிய ஆணைய இயக்குனர் மதியழகன், கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் நேற்று வெள்ளம்புத்தூர் கிராமத்துக்கு வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்ட மாணவன் சமயன் வீட்டை பார்வையிட்டு, அங்கிருந்த ஆராயியின் மூத்த மகள் அஞ்சலாட்சி மற்றும் அப்பகுதி பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பொது மக்கள் எங்கள் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை. முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனை அகற்ற வேண்டும். இரவு நேரத்தில் எங்கள் கிராமத்துக்கு வந்து செல்ல பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன் வைத்தனர். இதனை ஏற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பள்ளிக்கூட மாணவன் கொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கூடிய விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆராயி, அவரது மகள் தனம் ஆகியோருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட சமயனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story