முதுமலையில் கடும் வறட்சியால் பசுந்தீவனங்களை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்
முதுமலையில் பரவலாக மழை பெய்தும் வறட்சி நீடிக்கிறது. இதனால் இலைகள் உதிர்ந்து மரங்கள் பட்டு போனது போல் காட்சி அளிக்கிறது. எனவே பசுந்தீவனங்களை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
கூடலூர்,
கூடலூர், முதுமலை பகுதியில் பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது. கோடை காலம் தொடங்கி விட்டதால் நீர்நிலைகள் வறண்டு வருகிறது. இதனால் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான் இனங்கள் என தாவரங்களை உண்டு வாழும் வனவிலங்குகள் பசுந்தீவனங்களை தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் மிக குறைவாக தென்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளும் வனவிலங்குகளை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கோடை மழை அடிக்கடி பெய்தால் மட்டுமே கூடலூர், முதுமலை வனம் பசுமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகமானது. மேலும் வனங்களும் பசுமைக்கு திரும்பும் என வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன் பின்னர் மழை பெய்ய வில்லை. இதனால் முதுமலை வனத்தில் மீண்டும் வறட்சி நிலவுகிறது.
புற்கள் காய்ந்து விட்டதால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் புலிகள் காப்பகத்தின் கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் முதுமலை வனத்தில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்த்து வருவதால் பட்டு போன மரம் போல் காட்சி அளிக்கிறது. கூடலூர் கரையோரம் உள்ள புலிகள் காப்பக வனத்தில் ஓரளவுக்கு பசுமை தென்படுகிறது.
ஆனால் தெப்பக்காடு, முதுமலை மற்றும் மசினகுடி வனச்சரக பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கோடை மழை பெய்யுமா? என வனத்துறையினர், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். தற்போது முதுமலை அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இக்காலக்கட்டத்தில் மழை பெய்வது வழக்கம்.
மேலும் வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் மட்டுமின்றி பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஒட்டு மொத்தமாக கோடை மழை பெய்தால் மட்டுமே வறட்சியை சமாளிக்க முடியும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் வனவிலங்குகள் மற்றும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க வனப்பகுதியில் ஆங்காங்கே கூடுதலாக தடுப்பணைகளை கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை ஆர்வலர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Related Tags :
Next Story