மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்: சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புதிய கலெக்டர்


மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்: சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புதிய கலெக்டர்
x
தினத்தந்தி 27 Feb 2018 4:30 AM IST (Updated: 27 Feb 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

புதிய கலெக்டராக பொறுப்பேற்ற மலர்விழி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காதுகேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தொழில்தொடங்க வங்கி கடனுதவி அளிக்க வேண்டும், மாத உதவித்தொகையை ரூ.1500 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட மலர்விழிக்கு, இது தொடர்பாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அவர் நேரில் சென்று மாற்றுத் திறனாளிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் அளித்த கோரிக்கை மனுவை பார்வையிட்டு, இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

கலெக்டர் நேரில் வந்து கோரிக்கைகளை கேட்டறிந்ததால் மகிழ்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர். இதையடுத்து கலெக்டர் மலர்விழி மாற்றுத்திறனாளிகளுக்கு குடிநீர் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். 

Next Story