முதலியார்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல், 2 பேர் கைது


முதலியார்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கொலை மிரட்டல், 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2018 3:00 AM IST (Updated: 27 Feb 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதலியார்பேட்டை சேர்ந்தவர் செல்வம்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). பா.ஜ.க. மாநில துணைத்தலைவர். இவர் முதலியார்பேட்டை மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு 2 பேர் வந்தனர். அவர்கள் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டனர். அதற்குரிய பணத்தை கொடுக்கவில்லை. இதனை செல்வம் தட்டிகேட்டார். உடனே அவர்கள் தகாத வார்த்தைகளால் அவரை திட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வத்திடம் தகராறு செய்தது அரியாங்குப்பத்தை சேர்ந்த இளஞ்செழியன் (23), சதீஷ் (23) என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 

Next Story