பெல் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை


பெல் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
x
தினத்தந்தி 27 Feb 2018 10:34 AM IST (Updated: 27 Feb 2018 10:34 AM IST)
t-max-icont-min-icon

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது.

பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BHEL) என அழைக்கப்படுகிறது. நாடுமுழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ள இந்த பொதுத் துறை நிறுவனத்தில் ஆண்டுதோறும் ‘கேட்’ (GATE) தேர்வின் அடிப்படையில் ‘என்ஜினீயர் டிரெயினி’ பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது கேட் 2018 தேர்வின் அடிப்படையில் 50 என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 30 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 20 இடங்களும் உள்ளன. என்ஜினீயரிங், தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்த 27 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களும், முதுநிலை பட்டதாரிகள் 29 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்ப தாரர்கள் 1-9-1990 தேதிக்கு முன்னதாக பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பதாரர் கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் www.bhel.com . என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 12-3-2018-ந் தேதியாகும்.

Next Story