வேளாண் ஆராய்ச்சியாளர் பணிகள் ‘நெட்’ தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது
வேளாண் ஆராய்ச்சியாளர் பணிகளுக்கான காலியிடங்கள் ‘நெட்’ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 195 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-
வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் சுருக்கமாக ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வேளாண் ஆராய்ச்சி சேவைப் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை தேசியத் தகுதித் தேர்வு எனும் ‘நெட்’ (NET) தேர்வு மூலம் நிரப்புகிறது. 2018-ம் ஆண்டுக்கான முதல் ‘நெட்’ தேர்வு அடிப்படையில் இந்தப் பணியிடங்களில் வேலைவாய்ப்பை பெறலாம். அக்ரிகல்சரல் பயோடெக்னாலஜி, அக்ரி என்டமாலஜி, பிளான்ட் பிரீடிங், பயோகெமிஸ்ட்ரி, பேதாலஜி, பைசியாலஜி, சீடு சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, ஜெனிடிக்ஸ், வெட்னரி மெடிசின், வெட்னரி பார்மகாலஜி, பிஸரிஸ் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் உள்பட 29 விதமான பிரிவுகளில் ஆராய்ச்சிப் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 1-1-2018-ந் தேதியில் 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
பணியிடங்கள் உள்ள வேளாண் - அறிவியல் பாடப் பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்துத் தேர்வு, வைவா தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-3-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை www.asrb.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story