கடலூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையம்
கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை அருண்மொழிதேவன் எம்.பி. திறந்து வைத்தார்.
கடலூர்,
இந்திய வெளியுறவுத்துறையும், தபால்துறையும் இணைந்து மாவட்டங்கள் தோறும் பாஸ்போர்ட் சேவை மையத்தை தொடங்கி வருகின்றன. அந்த வகையில் தபால்துறையின் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட கடலூர் கோட்டத்தில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவைமையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதற்கு தபால் துறையின் மத்திய மண்டல தலைவர் வெங்கடேஸ்வரலு, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
இன்று வெளிநாடுகளுக்கு செல்கிறோமோ இல்லையோ பாஸ்போர்ட் என்பது கட்டாயம் தேவை என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதிலும் சான்றிதழில் பிழைகள் இருந்தால் அதை சரிசெய்து கொண்டு செல்ல என 3 நாட்கள் சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. இனிமேல் அந்த பிரச்சினை இருக்காது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறையும், தபால் துறையும் இணைந்து கடலூர் தலைமை தபால் நிலையத்திலேயே பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்துள்ளன. இனிமேல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சான்றிதழ்களை தலைமை தபால் நிலையத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே சரிபார்த்துக்கொள்ளலாம். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக தபால் வட்டத்தில் வேலூர், சேலம் மற்றும் காரைக்கால் ஆகிய 3 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 4-வதாக கடலூர் தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், சான்றிதழ் சரிபார்த்தல் போன்ற சேவைகள் நடைபெறும். முறையான மின்னணு நியமனம் பெற்ற விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு தினமும் காலை 9.30 மணி முதல் 4.15 மணிக்குள் நேரில் வரலாம். பாஸ்போர்ட் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story