விழுப்புரம் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்


விழுப்புரம் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 Feb 2018 3:30 AM IST (Updated: 28 Feb 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் நேற்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த சரக்கு ஆட்டோவில் 240 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு அருகே உள்ள கலிதீர்த்தான்குப்பத்தை சேர்ந்த முருகன் (வயது 42), விழுப்புரம் நாயக் கன்தோப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (33) என்பதும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு மதுபாட்டில் களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகன், நடராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Next Story