காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பி.ஆர்.பாண்டியன் பேட்டி
காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மன்னார்குடி,
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் சென்னையில் நீர்வழிச்சாலை அமைப்பது குறித்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் முதலில் தெரிவித்து இருந்தார்.
அதன்பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சுலபமல்ல என்றும், அதற்கான காலக்கெடு எதுவும் கிடையாது என்றும் கோதாவரி-காவிரி இணைப்பதன் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய மந்திரியின் இந்த கருத்தால் காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவரது பேச்சு நீதி மன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். மூத்த மந்திரியே முன்னுக்கு பின் முரணாக பேசுவது வேதனையளிக்கிறது. அவரது பேச்சு சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி சந்திப்பில் அனைத்து கட்சி விவசாயிகள் குழுவை சந்திக்க அவர் அனுமதி அளித்துள்ளாரா? மறுத்து விட்டாரா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
பிரதமர் சந்திப்பு குறித்து மர்மம் நீடிப்பதும், நிதின் கட்காரியின் பேச்சும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காலம் கடத்தும் செயல் மட்டுமின்றி காவிரியில் மத்திய அரசின் நயவஞ்சகத்தால் தமிழக உரிமை பறிபோகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story