திருப்பூரில் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து
திருப்பூரில் பனியன் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமானது.
திருப்பூர்,
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் கார்த்திக் சோலங்கி (வயது 47). இவர் திருப்பூர் லெட்சுமி நகர் பி.பி.எஸ். நகரில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் பனியன் நிறுவன குடோன் வைத்துள்ளார். கார்த்திக் சோலங்கி, பனியன் துணிகளை ஜாப்ஒர்க் அடிப்படையில் வெளியே கொடுத்து, டி-சர்ட் தயாரித்து பின்னர் தனது குடோனுக்கு கொண்டு வந்து அட்டைப்பெட்டிகளில் அடைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வர்த்தகம் செய்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அந்த பகுதியில் பனியன் குடோன் வைத்துள்ளதாக தெரிகிறது.
இவருடைய பனியன் நிறுவனத்தின் தரைத்தளத்தில் டி-சர்ட்டுகளை அட்டைப்பெட்டியில் அடைத்து ‘பேக்கிங்’ செய்யும் பணியில் நேற்று காலை 10 பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தயார்படுத்தப்பட்ட டி-சர்டுகளை கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குடோனில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தனர். 11 மணி அளவில் குடோனின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதை கவனித்த தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது டி-சர்ட்டுகள் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக வாளியில் தண்ணீரை எடுத்துச்சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். ஆனால் தீ மளமளவென பரவியது.
இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு திருப்பூர் மாவட்ட அதிகாரி(பொறுப்பு) வெங்கட்ரமணன் மேற்பார்வையில் நிலைய அதிகாரி காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். கட்டிடத்தின் முதல்தளத்தில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்தும், தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் கூடுதலாக தலா 1 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் 7 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற பனியன் நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான டி-சர்ட்டுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா?, இல்லை வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக குடோனில் தீப்பற்றிய சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து பார்வையிட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story