நெற்பயிர்கள், தண்ணீரின்றி கருகும் அவலம் விவசாயிகள் கவலை
பொறையாறு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொறையாறு,
தமிழக அரசு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததாலும், கர்நாடகாவில் இருந்து சரிவர தண்ணீர் திறந்துவிடாத காரணத்தாலும் மேட்டூர் அணையில் இருந்து காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோல் 2017-ம் ஆண்டும் காலம் தாழ்த்தி சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அவ்வாறு திறந்துவிடப்பட்ட தண்ணீர் பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிக்கு சரிவர வந்து சேரவில்லை. பொறையாறு, ஒழுகைமேட்டுப்பாளையம், காழியப்பநல்லூர், தில்லையாடி, காட்டுச்சேரி, மாணிக்கப்பங்கு உள்ளிட்ட பகுதிகள் கடல் சார்ந்த பகுதிகளாக இருப்பதால் நிலத்தடிநீரும் உப்பு நீராக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் மின்மோட்டார் மூலம் நெற்பயிர்கள் சாகுபடி செய்ய வாய்ப்பில்லை. இதனால் மேற்கண்ட பகுதி விவசாயிகளில் பெரும்பாலானோர் மழை மற்றும் காவிரி நீரை நம்பியே விவசாய பணி மேற்கொள்கின்றனர்.
இந்தநிலையில் மழை மற்றும் காவிரி ஆற்றின் மூலம் கிடைத்த தண்ணீரை பயன்படுத்தி மேற்கண்ட பகுதி விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்தனர். பொறையாறு சுற்று வட்டார பகுதிக்கு முக்கிய பாசன ஆறாக உள்ள வீரசோழனாற்றில் தற்போது தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதனால் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா-தாளடி நெற்பயிர்கள் கருகும் அவல நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்தநிலையில் சில இடங்களில் விவசாயிகள் படுகை அணை மூலம் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை மின்மோட்டார் மூலம் கருகும் நெற்பயிர்களுக்கு பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து தில்லையாடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தில்லையாடி, கிடாத்தலைவன்பாளையம் ஆகிய பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கருகி வருகின்றன. தண்ணீரின்றி நிலம் வறண்டு காணப்படுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தில்லையாடி பகுதியில் விவசாயம் செய்ய கேள்வி குறியாக உள்ளது. எனவே, வரும் காலங்களில் பாசன வாய்க்கால்களை பொதுப்பணி துறையினர் முழுமையாக தூர்வார வேண்டும். மேலும், இந்த பகுதியில் நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த பண்ணை குட்டை அமைக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story