லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தாமரைக்குளம்,
அரியலூர் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). இவரது உறவினர்கள் 4 பேரை கடந்த 2004-ம் ஆண்டு ஒரு குற்ற வழக்கு தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜாமீன் எடுப்பதற்கு அத்தாட்சி சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது. எனவே பரமசிவம், அப்போது ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த நாராயணனை(66) சந்தித்து அத்தாச்சி சான்றிதழ் கேட்டுள்ளார்.
அதற்கு நாராயணன், சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.800 லஞ்சமாக தரவேண்டும் என்று கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பரமசிவம், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் படி, ரசாயன பவுடர் தடவிய பணத்தை நாராயணனிடம், பரமசிவம் கடந்த 21.5.2004 அன்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நாராயணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை நேற்று விசாரித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய நாராயணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து நாராயணனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story