கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
செந்துறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததை அடுத்து கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இரும்புலிக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த போலீஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் கூலித்தொழிலாளி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்த போது அந்த நபர், இரும்புலிக்குறிச்சியை சேர்ந்த சின்னதுரை (வயது 33) என்பதும், மது அருந்தியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சின்னதுரைக்கு அபராதம் விதித்த போலீசார் அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அபராதத்தை செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதை யடுத்து வீட்டிற்கு நடந்து சென்ற சின்னதுரை அங்குள்ள பலா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசாரை கண்டித்து சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள், சின்னதுரை தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டனர். இதையடுத்து அவரது உறவினர்கள் விசாரித்த போது சின்னதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததாலேயே மனமுடைந்து அவர் தற்கொலை முடிவுக்கு வந்ததாக கருதினர்.
இதையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சின்னதுரை வீட்டு முன்பு செந்துறை-உடையார்பாளையம் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் என்ன?
இதற்கிடையே சின்னதுரை இறந்தது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததால் மன உளைச்சலில் சின்னதுரை தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் அதிகாரிகளின் நெருக்கடியால்...
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தங்களது கிராமத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியும் இதுவரை டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. இதனால் கிராமத்தில் இருக்கும் சிலர் மது அருந்தும் நிலை ஏற்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவில் நாளொன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற நெருக்கடியால் போலீசார் சாலையில் செல்வோர் மீது வாகன சோதனை வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதிக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது அத்துமீறிய வழக்குகள் நாள்தோறும் பதிவு செய்யப்படுவதால் சாமானியர்கள் நடமாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story