வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா முளைப்பாரியுடன் பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
மேற்பனைக்காடு கிராமத்தில் நடந்த வீர மாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கிராம கோவில்களில் மாசி மாதம் முதல் முளைப்பாரி, மது எடுப்புத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. முளைப்பாரித் திருவிழாவின் தொடக்கமாக கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக காப்புக்கட்டிய அன்றே கிராம பெண்கள் தங்கள் வீடுகளில் மண்சட்டியில் நவதானிய விதைகளை தூவி முளைப்பாரி வளர்த்து வந்தனர்.
ஆட்டம்-பாட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் ஒன்றுகூடி ஊர்வலமாக தப்பாட்டம், கும்மியாட்டத்துடன் ஊரின் மையப்பகுதியான மண்ணடித்திடலில் ஒன்றிணைந்து அங்கிருந்து அருகில் உள்ள பெரிய குளம் வரை ஊர்வலமாக சென்று முளைப்பாரிகளை குளத்தில் விட்டனர். அதே போல பலர் தங்கள் வீடுகளில் இருந்து கொழுக்கட்டை, சாதம் போன்றவற்றை கொண்டு வந்து குளத்தின் அருகில் வைத்து படையல் செய்தனர்.
மது எடுப்புத் திருவிழா
முளைப்பாரித் திரு விழாவை தொடர்ந்து அடுத்த வாரம் குதிரை எடுப்புத் திருவிழாவும், கல்லுப் பொங்கல் வைக்கும் விழாவும் நடக்க உள்ளது. தொடந்து வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு மது எடுப்புத் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவில் கிராமத்தில் உள்ள பெண்கள் தென்னம் பாளைகளை குடங்களில் வைத்து அலங்கரித்து ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று வீரமாகாளியம்மன் கோவிலில் வீசி செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கிராமத்தார் களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் பேலீசாரும் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story