மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது


மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2018 3:45 AM IST (Updated: 28 Feb 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது தப்பியோடிய பொக்லைன் எந்திர ஆபரேட்டருக்கு வலைவீச்சு

குளித்தலை,

குளித்தலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை அருகே தேவதானம் சுடுகாடு செல்லும் பாதையில் காவிரி ஆற்றுப்படுகையில் சட்டத்திற்கு புறம்பாக லாரியில் மணலை ஏற்றி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாரி மற்றும் பொக் லைன் எந்திரத்தை சுற்றிவளைத்தனர். அப்போது பொக்லைன் ஆபரேட்டர் பொக்லைன் எந்திரத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து லாரி டிரைவரான குளித்தலை அருகே உள்ள மேலவதியம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சங்கர்(வயது 29) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள பொக்லைன் எந்திர ஆபரேட்டரை வலைவீசி தேடிவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரி குளித்தலை போலீஸ் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story