ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பு: விற்பனைக்குழு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
வேளாண் விற்பனைக்குழு ஊழியர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை தட்டாஞ்சாவடியில் வேளாண் விற்பனைக்குழு உள்ளது. இங்கு தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த விற்பனைக்குழுவில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.
ஊழியர்களின் போராட்டத்தால் விவசாயிகள் கொண்டுவந்த விளைபொருட்களை எடைபோட முடியாமலும், பொருட்களை சாக்கு மாற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைபொருட்களை கொண்டு வந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் விவசாயிகள் விற்பனைக்குழு அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள் மறுநாள் வரும்படி கூறி அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்றும் ஊழியர்கள் போராட்டம் நீடித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வெகுதூரத்தில் இருந்து பொருட்களை கொண்டுவந்துள்ளோம். நாள்தோறும் இங்கு வந்து செல்வதுதான் எங்கள் வேலையா? என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள்.
பொருட்களை புதுச்சேரி கொண்டு வந்ததற்கான வண்டி வாடகையை கொடுத்தால்கூட தாங்கள் தமிழக பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு சென்று பொருட்களை விற்றுக்கொள்கிறோம் என்று வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர்களது கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.
விவசாயிகள் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டதால் அங்கு கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்கள். ஊழியர்களின் இந்த போராட்டத்தினால் நூற்றுக்கணக்கான நெல்மூட்டைகளும், மணிலா மூட்டைகளும் எடைபோடப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. சில விவசாயிகள் தங்கள் பொருட்களின் பாதுகாப்புக்காக அங்கேயே தங்கியுள்ளனர்.

Related Tags :
Next Story