பட்டுக்கோட்டையில் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி உண்ணாவிரதம்


பட்டுக்கோட்டையில் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 28 Feb 2018 4:15 AM IST (Updated: 28 Feb 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பயனீட்டாளர் நல அமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான ரெயில் பாதையில் பட்டுக்கோட்டை கொண்டப்ப நாயக்கன் பாளையம், அண்ணாநகருக்கு இடைப்பட்ட தடத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ளது. இதனால் அண்ணாநகர், ஓடைக்கரை, லட்சுமிநகர், பாரதிநகர், பூமல்லியார் குளக்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயனீட்டாளர் நல அமைப்பு சேர்ந்து பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பயனீட்டாளர் நலஅமைப்பு ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் ரெக்ஸ் தலைமை தாங்கினார். பயனீட்டாளர் நல அமைப்பு செயலாளர்கள் நெப்போலியன், குயிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூடப்பட்ட ரெயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இதுகுறித்து உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. 

Next Story