கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பக்தி பரவசத்துடன் நடைபெற்ற கொடியேற்றம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவில், பக்தி பரவசத்துடன் நேற்று கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த வாரம் தொடங்கி, பூத்தமலர் பூ அலங்காரம், பூச்சொரிதல் விழா, சாமி சாட்டுதல் நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு பொட்டு கட்டுதல் செய்யப்பட்டது. இதையொட்டி சபா மண்டபத்தில் இருந்து சங்க தலைவர் ஏ.கந்தசாமி ஆச்சாரி தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. இதில் திருமாங்கல்யம், மஞ்சள்புடவை, பூஜை பொருட்கள் வீதிஉலாவாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சாத்துபடி செய்யப்பட்டது.
அதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன்தெரு சாம்பான்குல மகாசபையினரால் பாலக்கொம்பு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஊன்றப்பட்டது. அதன்பிறகு கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதனைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில் திருக்கோவில் சார்பில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தலைமையில் கொடியேற்றம் செய்யப்பட்டது. இதற்கென வெண்துணியில் சிங்க வாகனத்தில் அம்மன் அமர்ந்திருப்பதை போன்று அமைக்கப்பட்ட கொடியில், அம்மனின் கண் திறக்கப்பட்டது. அதன்பிறகு பக்தி பரவசத்துடன் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் மலர்களை தூவினர். பல பெண்கள் அருள் வந்து ஆடினர். நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். கொடியேற்றத்துக்கு பிறகு ஏராளமான பெண்கள் பாலக்கொம்புக்கு மஞ்சள்நீர் ஊற்றினர். கோவில் மண்டபத்தில் விஸ்வகர்ம சங்க நிர்வாகி குமரேசன் சகோதரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை 5 மணியளவில் கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7 மணியளவில் அம்மனின் மின்தேர் ஊர்வலம் தொடங்கி வீதிஉலா வந்தது. 8 மணியளவில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story