மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
இந்திய அரசமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு சட்டம் ஆகியவற்றிற்கு முரணாக காவிரி வழக்கில் நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பை நீக்கிவிட்டு தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க, காவிரி வழக்கை விசாரிக்க அரசமைப்பு அமர்வு அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை மத்தியஅரசு அமைக்க கோரியும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். இதில் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு, தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுல்ஆபிதீன், நகர காசுக்கடை வர்த்தக சங்க தலைவர் வாசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி செந்தில், டாக்டர் பாரதிசெல்வன், காவிரி உரிமை மீட்புக்குழுவை சேர்ந்த பழனிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
காவிரி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இறுதி தீர்ப்பில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒருங்காற்றுக்குழுவையும் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்டது. இது பற்றி பிரதமர் மோடி இதுவரை எதுவும் பேசவில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவிற்கும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தமிழக அனைத்துக்கட்சி தலைவர்கள் நேரில் சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்போம். காவிரியில் தண்ணீர் திறந்துவிடமாட்டோம் என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கூறுகிறார். அவரது பேச்சுக்கு ஆதரவு கொடுப்பதை போல் பிரதமர் மோடியின் செயல்பாடு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமானது என்றும், 6 வாரத்திற்குள் அமைக்க சாத்தியம் இல்லை என்றும் மத்தியமந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். பயிர் கருகுவதால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். தமிழக விவசாயிகளின் உயிரும், உரிமையும் உங்களுக்கு(மத்தியஅரசு) எளிதானதாக தெரிகிறதா?.
காவிரி தண்ணீர் 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும் பயன்படுகிறது. காவிரி வழக்கில் வந்த தீர்ப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து 7 பேர் கொண்ட அரசமைப்பு அமர்வில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவரை சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story