பிளஸ்–2 தேர்வு இன்று தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 30,280 பேர் எழுதுகின்றனர்
இன்று தொடங்கும் பிளஸ்–2 தேர்வை தஞ்சை மாவட்டத்தில் 30,280 பேர் எழுதுகின்றனர்.
தஞ்சாவூர்,
பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று(வியாழக்கிழமை) தொடங்கி அடுத்தமாதம்(ஏப்ரல்) 6–ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 95 மைங்களில் பிளஸ்–2 தேர்வு நடக்கிறது. 212 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 267 மாணவர்களும், 16 ஆயிரத்து 235 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 85 பேர் மாற்றுத்திறனாளிகள்.
தனித்தேர்வர்களுக்காக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 778 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறாமல் கண்காணிப்பதற்காக 241 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் நேற்று மதியத்திற்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
அங்கு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தேர்வு எண்கள் எழுதப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தஞ்சை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் உள்ள அறையில் வினாத்தாள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11–ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 7–ந் தேதி தொடங்கி அடுத்தமாதம் 16–ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில 95 மையங்களில் 217 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 150 மாணவர்களும், 16 ஆயிரத்து 435 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 585 பேர் 11–ம் வகுப்பு தேர்வை எழுதுகிறார்கள்.
10–ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 16–ந் தேதி தொடங்கி அடுத்தமாதம் 20–ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 119 மையங்களில் 401 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 31 மாணவர்களும், 16 ஆயிரத்து 891 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 922 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

Related Tags :
Next Story