நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லது சரத்குமார் பேட்டி


நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லது சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 1 March 2018 4:30 AM IST (Updated: 1 March 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லது என்று சரத்குமார் கூறினார்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் ஜமீனுக்கு சொந்தமான பெரிய கோவில் உள்ளது. இக்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் நடிக்கும் பாம்பன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்போது சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

இன்றைய அரசியல் அரசியலாக உள்ளது. மேலும் நடிகர் சங்கத்தை பற்றி எனக்கு தெரியாது. அதில் நான் உறுப்பினராக கூட இல்லை. ஒகி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு குறைந்த அளவே நிதி கொடுத்துள்ளது. இதற்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு நல்லது தான். மக்களுக்கு யார் நல்லது செய்தால் என்ன. ஆனால் எப்ப வர வேண்டும் என்று உள்ளது. தற்போது இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் வருகின்றனர்.

கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும். அவர் தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளிக்கும் கப்பலை சீரமைத்து கொண்டு செல்கின்றனர். அதற்கு நான் முதலில் பாராட்டு தெரிவிக்கிறேன். நான் 21 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். ஓய்வுபெற்று ஓய்ந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை. நேரம் வரும் போது நானும் ஆட்சி பொறுப்பில் அமருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story