பருத்தி சாகுபடி: முறையாக ஏலம் நடக்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வெறிச்சோடியது
பெரம்பலூரில் 33,492 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டும், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முறையாக ஏலம் நடத்தப்படாததால் அது வெறிச்சோடியே காணப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில், பணப்பயிரான பருத்தி, தற்போது 33,492 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பருத்தி சாகுபடியில் முதன்மை மாவட்டமாக பெரம்பலூர் திகழ்கிறது. பனிப்பொழிவு உள்ளிட்ட சில பருவநிலை காரணங்களால் பருத்தி செடியின் வளர்ச்சியானது வழக்கத்தை விட சற்று உயரமானதாகவே இருந்தது. மேலும் பூச்சி தாக்குதல் பருத்தியில் அதிகம் வந்ததால் பூச்சிக்கொல்லியை அதிகளவில் விவசாயிகள் வயலுக்கு தெளிக்க நேரிட்டது.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு சுவாசக்கோளாறு உள்பட உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலைக்கு கூட தள்ளப்பட்டனர். பல்வேறு சிக்கல்களை தாண்டிய போதும் கூட தற்போது, ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் (ஒரு குவிண்டால் என்பது 100 கிலோ) பருத்தியே மகசூல் செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வெளியிடங்களிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் வியாபாரிகள் நேரடியாக பருத்தி வயல்களுக்கு சென்று விவசாயிகளிடம், தரத்திற்கேற்ப ஒரு குவிண்டால் ரூ.4,000-லிருந்து கொள்முதல் செய்து வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். விவசாயிகளின் உடனடி பணத்தேவை காரணமாக அவர்களும் கேட்கிற விலைக்கு கொடுத்து விடுகின்றனர்.
மேலும் பெரம்பலூர், எசனை, அனுக்கூர், வேப்பந்தட்டை, அனுக்கூர் குடிக்காடு, நூத்தப்பூர், நெற்குணம், வெண்பாவூர், நெய்குப்பை, பாண்டகப்பாடி, சிறுகன்பூர், நத்தக்காடு, மாதவி, அய்யலூர் குடிக்காடு உள்பட சுற்றுவட்டார கிராம பருத்தி விவசாயிகள் பலர், சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். அங்கு நடக்கும் ஏலத்தில் சாதாரண பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,500-லிருந்து ரூ.5,300 வரையிலும், நீண்ட இலை பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,500 முதல் ரூ.6,500 வரை விலை போகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலைப்படி பருத்தி ஏலம் நடைபெறும் என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு ஏலத்திற்கு கொண்டுவரப்படும் பருத்தி அதிக லாபத்திற்கு விற்று தரப்படுமா? என விவசாயிகள் சந்தேகத்துடன் இருப்பதாலும், ஏலம் குறித்த முழுவிவரம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்படாததாலும் கடந்த சில வாரங்களாகவே பெரம்பலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறவில்லை.
எனினும் இது தொடர்பாக வேளாண்துறையினர் ஆய்வு நடத்தி விவசாயிகளை ஏலத்திற்கு அழைத்து வருவதற்கான பணிகள் இதுவரை நடைபெறாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அந்த வகையில் நேற்றும் (புதன்கிழமை) பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் முறையாக நடக்காதால் அது வெறிச்சோடி காணப்பட்டது.
இது தொடர்பாக பருத்தி விவசாயிகள் அனுக்கூர் இளையராஜா மற்றும் அய்யலூர் குடிக்காடு அழகுமுத்து உள்ளிட்டோர் கூறுகையில், நடப்பாண்டு பருத்திசெடி நீண்ட வளர்ச்சியை பெற்ற போதிலும் மகசூல் வழக்கத்தை விட குறைவாக தான் இருக்கிறது. உழவு ஓட்டுதல், உரம் வாங்கியது, களைஎடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றுக்கான செலவுத்தொகை சற்று அதிகம் வந்துவிட்டது. எனவே பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முறையாக ஏலம் நடத்தி ரூ.5,000-முதல் ஒரு குவிண்டாலுக்கு விலை கிடைத்தால் தான் பருத்தி விவசாயிகள் சற்று நிம்மதி அடைய முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
பெரம்பலூரில் பருத்தி ஏலம் நடைபெறாதது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடி பரப்பு அதிகமாக இருந்த போதிலும் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் குறைந்து விட்டது. எனினும் விளைந்த பருத்தியை விற்பதற்கு வழிதெரியாமல் வெளியிடங்களுக்கு விவசாயிகள் அலைவது வேதனையளிக்கிறது.
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தியை விற்பனைக்காக கொண்டு செல்ல விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அது வெறிச்சோடியது. மேலும் இங்கு விற்பனைக்காக கொண்டு வரும் பருத்தியை கிட்டங்கியில் வைத்து வட்டியில்லாத பொருளட்டுக்கடன் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகளவு வியாபாரிகளையும் ஏலத்தில் பங்கு கொள்ள செய்ய விற்பனைக்கூட அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. ஏலம் தொடர்பாக விழிப்புணர்வையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தவில்லை. இவையே ஏலம் நடைபெறாமல் போனதற்கான மூலக்காரணமாக இருக்கிறது. எனவே இவற்றை சரி செய்து, கோவையிலுள்ள பருத்தி கார்ப்பரேஷன் அதிகாரிகளை முன்பு போல இங்கு வரவழைத்து பருத்தி ஏலத்தை நடத்தி உரிய விலைக்கு விற்று கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Tags :
Next Story