பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம், தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம், தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 March 2018 4:00 AM IST (Updated: 1 March 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

அம்பத்தூர்-ஆவடி இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 1.20 மணிக்கு அரக்கோணம் நோக்கி புறப்படும் மின்சார ரெயில், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இதேபோல் தடா-சூலூர்ப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று முதல் 17-ந் தேதி வரை (7, 14-ந் தேதிகள் தவிர்த்து) மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே செல்லும்.

அதேபோல சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே பிற்பகல் 1.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்தே புறப்படும்.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன. 

Next Story