மாசிமக திருவிழாவையொட்டி நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம்


மாசிமக திருவிழாவையொட்டி நாகநாத சுவாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 1 March 2018 4:15 AM IST (Updated: 1 March 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

மாசி மகத்திருவிழாவையொட்டி நாகநாத சுவாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை நந்தி கோவில் தெருவில் நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 19-ந் தேதி மாசிமகத் திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாகநாதசுவாமி, ஆனந்தவல்லி தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து, வீதி உலா வந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முதலில் விநாயகர், முருகன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறிய சப்பரத்திலும், நாகநாதசுவாமி உடனுறை ஆனந்தவல்லி தாயார் முதல் தேரிலும், ஆனந்தவல்லி தாயார் 2-வது தேரிலும் எழுந்தருளினர். பின்னர் ஏராளமான பக்தர்கள் தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.

தேர்கள் கோவிலிலிருந்து புறப்பட்டு வடக்கு ஆண்டாள் வீதி, கிழக்கு ஆண்டாள் வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி ரோடு, நந்தி கோவில் வழியாக சென்று மதியம் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி கோட்டை சரக போலீசார் போக்கு வரத்தை மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் கிராமத்தில் உள்ள காசி விசாலாட்சி அம்மாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் கடந்த 19-ந் தேதி திருவிழா தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story