ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் 6 மீனவர்கள் சென்னை வந்தனர்
ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் 6 மீனவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
ஆலந்தூர்,
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஆண்டு துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் மீன்பிடிக்கும் வேலைக்கு சென்றனர். துபாயில் உள்ள கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்கள், ஈரான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கிரீஸ் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு அபராதத்தொகையும் விதிக்கப்பட்டது.
மீனவர்களின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதைதொடர்ந்து மத்திய அரசு உதவியுடன் மீனவர்கள் சென்ற துபாய் நிறுவனத்தின் மூலமாக அபராதத்தொகை செலுத்தப்பட்டது.
இதையடுத்து 15 மீனவர்களில் முதல் கட்டமாக ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர் கடந்த 20-ந் தேதி விமானம் மூலம் சென்னை வந்தனர். முன்னதாக ஒருவர் சொந்த ஊருக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் ஈரான் சிறையில் இருந்த மீதம் உள்ள 6 மீனவர்களான கன்னியாகுமரியை சேர்ந்த சகாய சார்லஸ், அருள்தாசன், வினிஸ்டன், ஸ்டீபன்அஜய், நெல்லையை சேர்ந்த பாக்கியதாஸ், அந்தோணி சூசய்பெல்சன் ஆகியோர் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணைய உதவி கமிஷனர் ரமேஷ், மீன்வளத்துறை அதிகாரிகள், கன்னியாகுமரி மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் அந்தோணி ஆகியோர் வரவேற்றனர்.
தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய-மாநில அரசுகளுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அரசு செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story