விவசாயிகளின் கோரிக்கைகளை மக்களிடம் விளக்கி கூறும் 100 நாள் விழிப்புணர்வு பயணம்
விவசாயிகளின் கோரிக்கைகளை மக்களை சந்தித்து விளக்கி கூறும் வகையில் 100 நாள் விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது.
கன்னியாகுமரி,
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தநிலையில் தமிழகத்தில் விவசாயிகள் சந்தித்துவரும் பிரச்சினைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிகூறி விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 100 நாள் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது.
இந்த பயணம் நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கியது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பழனிவேல், செய்தி தொடர்பாளர் செல்வபெருமாள், மாநில துணைத்தலைவர்கள் செந்தில் குமாரசாமி, கிருஷ்ணன், கிட்டப்பா ரெட்டி, நிர்வாகிகள் கார்த்திகேயன் சந்திரசேகர், நீர் பாசன சங்கத்தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசன சங்க கூட்டமைப்பு தலைவர் செல்லப்பா, தியாகி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பயணத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரை நிர்வாண கோலத்துடன் நெற்றியில் பட்டை பூசி வித்தியாசமான தோற்றத்தில் கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் பற்றி மக்களிடம் எடுத்துக்கூறுவோம் என இந்த பயணத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 100 நாட்கள் நடைபெறும் இந்த பயணம் சென்னையில் நிறைவடைகிறது. அதன்பின்பு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். அமைக்கத்தவறினால் பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். தமிழக அரசும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்பால் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இதற்காக நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
தஞ்சையை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி புனரமைத்து விவசாயத்தை மேம்பாடு அடையச் செய்ய வேண்டும்.
நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்க மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.

Related Tags :
Next Story