தி.மு.க. பிரமுகர் கொலை: கைதான நகை தொழிலாளி போலீசில் வாக்குமூலம்.
ரூ.2½ லட்சம் கொடுத்த பிறகும் வீட்டுமனை தராததால் தி.மு.க. பிரமுகரை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று கைதான நகை தொழிலாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் கே.கே.சாலை முத்தையால் நகரை சேர்ந்தவர் லெனின்பாண்டியன் (வயது 48), தி.மு.க. பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சொந்த வேலை காரணமாக லெனின்பாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில் அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் லெனின்பாண்டியனை விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பத்தை சேர்ந்த நகை தொழிலாளியான தாமு என்கிற தாமோதரன் (29) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தாமோதரனை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு முதல் விக்கிரவாண்டி அருகே துறவியில் லெனின்பாண்டியன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். நானும் தி.மு.க.வில் வர்த்தக அணியில் இருந்து கட்சி பணி செய்து வந்தேன். அதன் மூலம் லெனின்பாண்டியனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் நான் வீட்டுமனை வாங்குவதற்காக மாதந்தோறும் ரூ.1,500 வீதம் தவணை முறையில் பணம் கொடுத்து வந்தேன். கடந்த 2014-ம் ஆண்டுடன் தவணை தொகையாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை லெனின்பாண்டியனிடம் கட்டி முடித்து விட் டேன். ஆனால் அவர் எனக்கு வீட்டுமனையும் தரவில்லை, நான் கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் காலம் கடத்தி வந்தார். இதனிடையே எனது மனைவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரை கவனிக்க எனக்கு பணத்தேவை அதிகமானது. ஆனால் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போதும் லெனின்பாண்டியனிடம் சென்று குடும்ப சூழ்நிலையை எடுத்துச்சொல்லி பணத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நான் லெனின்பாண்டியனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் தரும்படி கேட்டேன். அதற்கு திருவாமாத்தூரில் வீட்டுமனை வாங்குவதற்கு ஒருவர் வருவதாகவும், அவரிடம் பேசி பணம் வாங்கி தருவதாகவும், தன்னுடன் திருவாமாத்தூருக்கு வருமாறு கூறி என்னை அழைத்தார். அதன்படி லெனின்பாண்டியனின் மோட்டார் சைக்கிளில் நான் திருவாமாத்தூர் சென்றேன்.
அங்கு செல்லும் வழியில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் அவர் என்னை மிகவும் தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் வேறு வழியின்றி பேனா கத்தியால் குத்தி அவரை கொலை செய்தேன்.
இதையடுத்து தாமோதரனை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான தாமோதரன், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் துணை மேலாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story