விழுப்புரத்தில் சட்ட சேவைகள் முகாம்
விழுப்புரத்தில் நடந்த சட்ட சேவைகள் முகாமை நீதிபதி உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் பங்கேற்கும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்விற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சட்ட சேவைகள் முகாம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி உமாமகேஸ்வரி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வக்கீல்கள் சந்திரமவுலி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, முகாமில் இடம் பெற்றிருந்த அரசுத்துறை சார்ந்த அரங்குகளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) காயத்திரி சுப்பிரமணியன், விழுப்புரம் தாசில்தார் சுந்தர்ராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வேல்முருகன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் குருவையா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, சமூகநலத்திட்ட செயல் அலுவலர் செல்விகண்ணம்மாள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பிரேமலதா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
இம்முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வருவாய்த்துறை, காவல்துறை, சமூகநலத்துறை, கல்வித்துறை, வனத்துறை, வேளாண் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட 21 அரசு துறைகளை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இந்த அரங்குகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். மேலும் பொதுமக்கள் பலர், அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக நீதிபதிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Related Tags :
Next Story