காரிமங்கலம், அதியமான்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா


காரிமங்கலம், அதியமான்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம், அதியமான்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காரிமங்கலம் மொரப்பூர் சாலையில் நடைபெற்ற விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.குமரவேல் தலைமை தாங்கினார். இதையொட்டி பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கட்சியினர் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்்தலைவர் மாதையன், காரிமங்்கலம் நகர தலைவர் சீனிவாசன், கெரகோடஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மகேஷ்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர இளைஞர் அணி அமைப்பாளர் அருள் செய்திருந்தார்.

அதியமான்கோட்டை

நல்லம்பள்ளி அடுத்துள்ள அதியமான்கோட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் தலைமை தாங்கினார். இதையொட்டி கட்சி கொடி ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், கட்சியினர் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் காளியப்பன், ரங்கநாதன், எல்லப்பன், வீரமணி, சந்திரன், மாதன், அண்ணாதுரை, துரைராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story