வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.8 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்


வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.8 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.8 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா பிரசித்திப்பெற்றதாகும். விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமாரியம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு பாடைக்காவடி திருவிழா வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கோவில் வளாகத்தில் உள்ள 6 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.

வசூல்

திருவாரூர் அய்யப்ப சேவா சங்கத்தினர் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 922 வசூலானது. அதேபோல 266 கிராம் தங்கத்தையும், 416 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 

Next Story