வந்தவாசியில் கூடுதல் குடிநீர் குழாய் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வந்தவாசியில் கூடுதல் குடிநீர் குழாய் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி,
வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகில் குடிசை மாற்று வாரியம் மூலம் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதில் 144 குடியிருப்பு வீடுகள் உள்ளன. வீடுகளில் வசித்து வருபவர்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு மாதந்தோறும் ரூ.250 வாடகை செலுத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு நகராட்சியின் மூலம் 3 பொது குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதிலிருந்து வரும் சிறிதளவு நீரால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் குடிநீர் குழாய் அமைக்க குடிசை மாற்று வாரியமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கூடுதல் குடிநீர் குழாய் அமைக்கவும், தற்போது உள்ள குழாய்களில் சீரான முறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர்களும், பாரதீய ஜனதா கட்சியினரும் பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் குருலிங்கம் தலைமையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் புதிய பஸ்நிலைய இணைப்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி நகராட்சி பொறியாளர் சந்திரசேகரன், மேலாளர் ராமலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விரைவில் கூடுதலாக 2 பொது குழாய்கள் அமைத்து தரப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் காரணமாக புதிய பஸ் நிலைய சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story