வீராணம் இரட்டை கொலை வழக்கு தள்ளிவைப்பு
சேலம் அருகே நடந்த வீராணம் இரட்டை கொலை வழக்கு விசாரணையை நீதிபதி ரவீந்திரன் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
சேலம்,
சேலம் அருகே வீராணம் பள்ளிக்கூட தாதனூர் கிராமம் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் நடந்த மோதலில் 2003-ம் ஆண்டு சுந்தரராஜன் (வயது 29), குப்புசாமி (30) ஆகிய இரண்டு வாலிபர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் 24 பேரை தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 24 பேரில் மாவோயிஸ்டு பழனிவேல் ஒருவரும் ஆவார். மேலும், வழக்கு விசாரணையின்போது 3 பேர் உயிரிழந்துவிட்டதால் மீதமுள்ள 21 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாவோயிஸ்டு பழனிவேலை கியூ பிரிவு போலீசார் மேட்டூரில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு தீர்ப்பு ஏற்கனவே 4 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம் மத்திய சிறையில் இருக்கும் மாவோயிஸ்டு பழனிவேலை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும், வழக்கு தொடர்புடைய 21 பேரும் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், வருகிற 8-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் இரட்டை கொலை வழக்கில் தீர்ப்பு கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story