சாலை விபத்துகளை தடுக்க போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க நடவடிக்கை கலெக்டர் உத்தரவு
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டும் டிரைவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்கு, போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் அவர்கள் இணைந்தும், தனித்தனியாகவும் வாகன சோதனை நடத்துகின்றனர். அப்போது அதிகவேகம், அதிகபாரம், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
அதேநேரம் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் மட்டுமே வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளே சிக்குகின்றனர். ஆனால், சரக்கு வாகனங்கள் உள்பட பிற வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் பெரும் விபத்தாகி விடும். எனவே, அதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து அதிகாரிகளுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் போக்குவரத்து அதிகாரிகள் களத்தில் இறங்க உள்ளனர். இதற்காக மதுபோதையில் வரும் டிரைவர்களை பரிசோதிக்கும் கருவிகள் வாங்கப்பட இருக் கிறது. இதற்காக கலெக்டர் பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கருவிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பரிசோதனை கருவிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. அதை அவர்கள் வாகன தணிக்கையின் போது கொண்டு செல்ல வேண்டும். இதர சோதனையோடு, டிரைவர் மது குடித்து இருக்கிறாரா? என்றும் அந்த கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு மது குடித்து இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் சாலை விபத்துகள் மேலும் குறையும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story