மலையேறும் மத குரு..!


மலையேறும் மத குரு..!
x
தினத்தந்தி 2 March 2018 11:57 AM IST (Updated: 2 March 2018 11:57 AM IST)
t-max-icont-min-icon

எத்தியோப்பியா நாட்டில் இருக்கும் கெர்ரால்டா மலையில், ஆச்சரியமான தேவாலயம் ஒன்று இருக்கிறது.

எத்தியோப்பியா நாட்டில் இருக்கும் கெர்ரால்டா மலையில், ஆச்சரியமான தேவாலயம் ஒன்று இருக்கிறது. ‘ஹைலெஸ் லஸி’ என்ற அந்த தேவாலயம், செங்குத்தான கெர்ரால்டா மலையின் நடுப்பகுதியில் அமைந்திருப்பதுடன், அச்சுறுத்தும் விதத்திலும் காட்சியளிக்கிறது.

தேவாலயத்திற்கு என படிக்கட்டுகளோ, வழித்தடங்களோ கிடையாது. மலையின் நடுப்பகுதியில் சின்னதாகக் குடையப்பட்டிருக்கும் அந்த தேவாலயத்திற்கு, கஷ்டப்பட்டு மலையேறித் தான் செல்ல வேண்டும். ஆனால் அத்தகைய ஆபத்துகளையும் தைரியமாக எதிர்கொள்கிறார், அந்த தேவாலயத்தின் மத குரு. ‘குட்டி அபுனு’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இவர், தினமும் இரண்டு மணிநேரம் மலையேறி, இந்த தேவாலயத்தை அடைகிறார்.

“மலைத் தொடர்ச்சியின் நடுவில் இந்த தேவாலயம் அமைந்திருப்பதால், சில பகுதிகளை நடந்தும், பல பகுதிகளை மலையேறியும் கடக்க வேண்டியிருக்கிறது. ஆபத்தான தேவாலயம் என்பதால், மக்கள் மலையேறி வரப் பயப்படுகிறார்கள். இருப்பினும் நான் காத்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் ஊர் மக்கள் ஒரு நாள் மலையேறி, இந்த ஆலயத்திற்கு வருவார்கள்” என்றவர், சாகச விரும்பிகளும், மலையேற்ற வீரர்களும் அடிக்கடி இங்கு வந்து செல்வதாகவும் கூறுகிறார்.

Next Story