கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்


கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 3 March 2018 3:15 AM IST (Updated: 2 March 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் எஸ்.ரவி, மாவட்ட துணை செயலாளர்கள் ரஜினிபிரபாகர், ரஜினிமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடலூர் நகர செயலாளர் இனியன், கடலூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மாலிக், பண்ருட்டி நகர செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் நகர செயலாளர் பாஷா, குமராட்சி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், காட்டுமன்னார்கோவில் ஒன்றிய செயலாளர் ராமு, கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ரஜினிபன்னீர், விருத்தாசலம் நகர செயலாளர் பாஸ்கர், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ரஜினிரவி, மங்களூர் ஒன்றிய செயலாளர் வேல்மணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடலூர் மாவட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமித்து தலைமையிடம் ஒப்படைப்பது, கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story