கோவையில் சிரியா நாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


கோவையில் சிரியா நாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2018 4:45 AM IST (Updated: 3 March 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

சிரியா நாட்டின் மீதான தாக்குதலுக்கு எதிரப்பு தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

கோவை,

சிரியா நாட்டில் அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தும் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அமெரிக்க, ரஷியா பன்னாட்டு ராணுவத்தை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட அனைத்து ஜமா அத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜா உசேன் தலைமை தாங்கினார்.

அப்துல் அஜீஸ், பசுருதீன், அகமது பாஷா, முகமது பாஷா, காதர், அபிபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்

கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சிரியா நாட்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கி பேசிய தாவது:-

சிரியா நாட்டின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை போன்று தற்போது சிரியாவிலும ஆதிக்க சக்திகள் தங்கள் வெறியாட்டத்தை நடத்துகின்றன. சிரியா தாக்குதலில் காயம் அடைநதவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அந்த நாட்டில் அமைதி நிலவ ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகள் தங்கள் எல்லைகளை திறந்து சிரியா மக்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story