திருநங்கைகளுக்கு அடையாள அட்டை மகளிர் நல ஆணையர் வழங்கினார்
வேலூரில் நேற்று திருநங்கைகளுக்கு, மகளிர் நல ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் அடையாள அட்டை வழங்கினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அவர்களில் பலர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு நலவாரியம் மூலம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 200 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அதன்மூலம் அவர்கள் அரசு நலத்திட்டங்களை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் 64 திருநங்கைகள் தங்களுக்கு அடையாள அட்டை கேட்டு சமூகநலத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்குவதற்கு 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கலெக்டர் ராமன் முன்னிலையில் மகளிர் நல ஆணையர் கண்ணகிபாக்கியநாதன், அடையாள அட்டைகள் வழங்கினார். அப்போது மாவட்ட சமூகநல அலுவலர் சாந்தி உடனிருந்தார்.
இந்த அடையாள அட்டைகள் மூலம் திருநங்கைகள் ரேஷன்கார்டு, வீட்டுமனை பட்டா, கடன் உதவி உள்பட அனைத்து அரசு சலுகைகளும் பெற முடியும் என்றும், விடுபட்டவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story