தஞ்சை பெரியகோவில் முன்பு நடமாடும் ஆலோசனை வாகன சேவை
தஞ்சை பெரிய கோவில் முன்பு நடமாடும் ஆலோசனை வாகன சேவையை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த போலீஸ்துறையின் சார்பில் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஆலோசனை வழங்க வாகனம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஆலோசனை வாகன சேவை தொடக்கவிழா தஞ்சை பெரியகோவில் முன்பு நேற்று நடந்தது. வாகன சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது தலைகவசம் அணிய வேண்டும். கார் ஓட்டும்போது சீட்பெல்ட் மாட்ட வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பெண்களுக்கான பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் தங்களது குறைகள், தேவைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
இந்த வாகனம் தஞ்சை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கும்பகோணம், திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வரும். இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு போலீஸ்காரரும் இருப்பார்கள். மேலும் 83000-71100 என்ற வாட்ஸ்அப் நம்பர் மூலம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அப்படி தெரிவித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வாகனத்தில் முன்புறமும், பின்புறமும் தலா 2 கண்காணிப்பு கேமராக்களும், வாகனத்தின் மேல்பகுதியில் சுழலும் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் வெளியேயும், உள்ளேயும் அகன்ற திரையுடன் கூடிய டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. வெளியே உள்ள டி.வி.யில் போக்குவரத்து விதிமுறைகள், பெண்கள் பாதுகாப்பு, போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் புகார் தெரிவிப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகளும் ஒளிபரப்பப்படுகின்றன. உள்ளே உள்ள டி.வி.யில் கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் வாகனத்திற்குள் அமர்ந்தபடி பார்க்கும் வகையில் ஒளிபரப்பாகும்.
இந்த வாகனத்தை பெரியகோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். தொடக்கவிழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேல், ஆயுதப்படை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story