பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதில் நடைமுறைசிக்கல்: மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தவர்கள் அவதி
மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களால் பக்தர்கள் அவதி அடைகின்றனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஐகோர்ட்டு உத்தரவின் படி பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கு, வடக்கு நுழைவு வாயில்களில் காலணி பாதுகாப்பு கட்டிடத்தில் செல்போனுக்கு தனியாக பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தில் செல்போனை வைப்பதற்கு முன்னதாக பொருட்களை சோதனை செய்யும் எந்திரம் மூலம் ஸ்கேன் செய்து, பின்னர் சோதணை செய்த தேதி, நேரம் ஆகியவற்றை ஸ்டிக்கரில் குறித்து அதனை செல்போனில் ஒட்டிவிடுகிறார்கள்.
பின்னர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போனை பெட்டகத்தில் வைக்க போன் பற்றிய விவரமும், உரிமையாளர் விவரமும் கோவில் அலுவலர், பக்தர் கையொப்பமிட்ட ரசீதும், மேற்கு, வடக்கு நுழைவு வாயில் விவரங்களுடன் டோக்கனும் வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் வாங்கிய செல்போனை கோவில் அலுவலர்கள் ஒரு பையில் வைத்து ரசீதின் நகலை, டோக்கனை வைத்து பெட்டகத்தின் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து விடுகிறார்கள். இவ்வாறு நேற்று முதல் செல்போனை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாத்துவருகின்றனர். கோவிலில் தரிசனம் செய்த பின்னர் ரசீது, டோக்கனை கொடுத்து செல்போனை திரும்பப் பெறவேண்டும். நான்கு மணி நேரத்திற்கு ஒரு செல்போனை பெட்டகத்தில் வைக்க ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செல்போனுக்கு தடை என்று அறிவித்து இருந்தாலும் அதுவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்ட நிலையில் ஒரு சிலரை தவிர அனைவரும் செல்போன்களுடனேயே நேற்று கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் முதலில் செல்போனுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் இடத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. பின்னர் பெட்டகத்தில் வைக்க ரசீது மற்றும் டோக்கன் பெறும் இடத்திலும் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திரும்ப பெற்றுச்செல்லவும் காத்திருக்க வேண்டி இருந்தது. இவ்வாறாக கோவிலில் ஒரு புதிய வரிசை உருவாகியுள்ளது.
இந்த நடைமுறைச் சிக்கல் பக்தர்களை அவதி அடையச்செய்திருக்கிறது.
இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
கரூர் பக்தர் ஸ்ரீதர்:-காலணியை பாதுகாப்பாக வைக்க ஒரு வரிசை, போலீசார் சோதனை செய்ய ஒரு வரிசை, கட்டண தரிசன டிக்கெட் வாங்க ஒரு வரிசை, மீனாட்சி அம்மன் தரிசனத்திற்கு ஒரு வரிசை, சாமி தரிசனத்திற்கு ஒரு வரிசை என இருந்த நிலையில் இந்த வரிசைகளின் பட்டியலில் புதிதாக செல்போன் பாதுகாக்க 2 வரிசைகளை உருவாக்கி பக்தர்களை அவதிக்குள்ளாக்குகிறார்கள். ஒரு சிறிய கட்டிடத்தில் அனைத்தும் கொண்டு வந்தால் எப்படி? தனித் தனியாக அனைத்து வசதிகளையும் பக்தர்களுக்கு செய்து வைக்க வேண்டும்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பக்தர் வீரதீரதில்லை:- எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற கோவிலில் போதிய முன்னேற்பாடின்றி அமலுக்கு கொண்டு வந்து பக்தர்களை துன்புறுத்தக்கூடாது.
பெண் பக்தர் கவுரி:- நாங்கள் கோவையில் இருந்து வருகிறோம். ஒரு போனுக்கு பத்து ரூபாய் என்பது அதிகம், செல்போன் இப்பொழுது எல்லோருக்கும் முக்கியமானதாகிவிட்டது. செருப்புக்கு, கைப்பைக்கு, செல்போனுக்கு என தனித் தனியாக இல்லாமல் மொத்தமாக ஒரு பையில் வைத்து ஸ்கேன் செய்து ஒரு லாக்கரில் நாங்களே வைக்கவும் எடுத்துச் செல்லவும் ஏற்பாடும் செய்ய வேண்டும்.
உள்ளூரைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே உள்ள பல்வேறு கெடுபிடிகளால் நாங்கள் கோவிலுக்குள் சென்று எங்கள் அன்னை மீனாட்சியை தரிசித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இதுவும் வந்து விட்டது என்று வேதனையுடன் தெரிவித்ததோடு மற்ற கோவில்கள் போன்று உள்ளூர்வாசிகளுக்கென்று தனி வசதி செய்து தரவேண்டும் என்றார்.

Related Tags :
Next Story