ஒரு குடம் நீரை ரூ.15-க்கு விலைக்கு வாங்கும் நிலை: மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை


ஒரு குடம் நீரை ரூ.15-க்கு விலைக்கு வாங்கும் நிலை: மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 March 2018 3:00 AM IST (Updated: 4 March 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஒரு குடம் நீரை ரூ.15-க்கு விலைக்கு வாங்கும் நிலை உள்ளதால் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்,

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னமாயாகுளம், திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், விவேகானந்தபுரம், பாரதி நகர், முத்துராஜ் நகர், ரோஜா நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் 3 மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக இதன் மூலம் குடிநீர் வழங்கப்படுவது இல்லை. இதன்கரணமாக குடிநீரை தனியார் வண்டிகளில் ஒரு குடம் ரூ. 15-க்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப் பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடிதண்ணீர்க்காக மட்டும் இப்பகுதியினர் நாள் ஒன்றுக்கு ஒரு வீட்டிற்கு ரூ. 75 செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீனவர் மற்றும் கூலித்தொழிலாளர்களாக இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story