ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகரில் ரூ.460 கோடிக்கு திட்டப்பணிகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகரில் ரூ.460 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன.
மதுரை,
மதுரை மாநகரம், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி பல்வேறு திட்டங்களை தயாரித்து உள்ளது. இந்த நிலையில் இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஸ்மார்ட் சிட்டியின் நிர்வாக குழு கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது.
மாநகராட்சி ஆணையாளரும், ஸ்மார்ட் சிட்டி நிறுவன மேலாண்மை இயக்குனருமான அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார். சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரும், மதுரை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத் தலைவருமான சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மதுரை மாநகரில் ரூ.460 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.63 கோடி செலவில் புராதன சின்னங்களை மேம்படுத்துதல், ரூ.137 கோடியே 74 லட்சம் செலவில் பெரியார் பஸ் நிலையத்தினை மறு உட்கட்டமைப்பு செய்தல், ரூ.28 கோடியே 97 லட்சம் செலவில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கனரக வாகன நிறுத்துமிடம் அமைத்தல், ரூ.7 கோடி செலவில் சுற்றுலா பயணிகளுக்கான நவீன அங்காடி அமைத்தல், ரூ.93.15 கோடி செலவில் வைகை ஆற்றின் கரையோரங்களில் மேம்படுத்துதல், ரூ.120 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்துதல், ரூ.10 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை சேகரிப்பு திட்டம் செயல்படுத்துதல் போன்ற பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த திட்டப்பணிகள் குறித்து மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு அனுமதி கொடுத்தவுடன், மத்திய அரசிடம் அனுப்பி நிதி உதவி பெறப்படும் இந்த கூட்டத்தில் துணை ஆணையாளர் மணிவண்ணன், நகரப்பொறியாளர் மதுரம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக செயலர் அமித்தா குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story