மதுரை போலீசாரிடம் தப்பிய ரவுடி விருதுநகர் கோர்ட்டில் சரண்
மதுரை போலீசாரிடம் தப்பிய ரவுடி விருது நகர் கோர்ட்டில் சரண் அடைந்தான்.
விருதுநகர்,
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்தவர் அழகர் என்ற அழகர்சாமி. இவருடைய மகன் மாயக்கண்ணன் (வயது 28). கடந்த 1-ந்தேதி இவரது வீட்டில் பதுங்கியிருந்த ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்த போது நடந்த என்கவுண்ட்டரில் கார்த்திக் என்ற சகுனி கார்த்திக்(28), மந்திரி என்ற முத்து இருளாண்டி(30) ஆகிய 2 ரவுடிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்போது அதே வீட்டில் இருந்த சென்னையை சேர்ந்த மற்றொரு மாயக்கண்ணன் என்ற ரவுடி தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சிக்கந்தர் சாவடியை சேர்ந்த மாயக்கண்ணன் (28) விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தான். மாஜிஸ்திரேட்டு மும்தாஜ், அவனை 5-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சரண் அடைந்த மாயக்கண்ணன் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில் அவன் மீது திருட்டு வழக்குகள், வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவன் சிறைக்கு சென்ற போது, ரவுடி முத்து இருளாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயக்கண்ணன் வீட்டிற்கு முத்து இருளாண்டியும், சகுனி கார்த்திக்கும் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
போலீசார் அங்கு செல்வதற்கு முன்பு அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். இந்த நிலையில் தான் மீண்டும் மாயக்கண்ணன் வீட்டிற்கு அவர்கள் வந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்ற போது அவர்களை பிடிக்க முயன்ற போது தான் என்கவுண்ட்டர் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
இதற்கிடையில் என்கவுண்ட்டர் உண்மையான சம்பவம் அல்ல என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் கூறி வருகிறார்கள். முத்து இருளாண்டியின் உறவினர்கள் கூறியதாவது;-
கடந்த வாரம் முத்து இருளாண்டியின் வீட்டிற்கு செல்லூர் போலீசார் சென்றனர். அப்போது அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் சகோதரர் ராஜாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அப்போது முத்து இருளாண்டியை சரண் அடைந்தால், இவர்களை விடுப்பதாக போலீசார் கூறி சென்றனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி முத்து இருளாண்டி மனைவியை பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தந்தை நடந்த சம்பவங்களை தெரிவித்து, உடனே போலீசில் சரண் அடையுமாறு கூறியுள்ளார்.
அதைதொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு முத்து இருளாண்டியும், சகுனி கார்த்திக்கும் அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தனர். இதை உறுதி செய்த அவரது நண்பர்கள், இந்த தகவலை அவர்களது வீட்டிற்கு தெரிவித்தனர். இதையடுத்து ராஜாவை மட்டும் போலீசார் விடுவித்தனர். அப்போது அவர், தனது தம்பி மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறியபோது, முத்து இருளாண்டியுடன் சேர்த்து அனுப்புவதாக போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர். அதனை நம்பி, ராஜா மட்டும் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.
தங்களிடம் சிக்கிய இருவரையும் போலீசார் என்கவுண்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முதலில் தேர்வு செய்த இடம் அலங்காநல்லூர் பகுதி. அந்த நேரத்தில் சிக்கந்தர்சாவடி வீட்டில் மாயக்கண்ணன் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் மாயக்கண்ணனை தங்களது பிடியில் கொண்டு வந்து, என்கவுண்ட்டரை நிறைவேற்ற அவரது வீட்டை தேர்வு செய்தனர்.
அதன்படி முத்துஇருளாண்டி தனது மனைவியை பார்க்க மாயக்கண்ணன் வீட்டிற்கு வந்தது போல் ஒரு நாடகத்தை நிகழ்த்தி, இந்த என்கவுண்ட்டரை சம்பவத்தை திட்டமிட்டபடி நடத்தி முடித்துள்ளனர். அந்த நேரத்தில் மாயக்கண்ணன் காயத்துடன் தப்பி சென்றதாகவும், வீட்டில் இருந்த முத்துஇருளாண்டியின் மனைவி மற்றும் அவரது உறவினரை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். எல்லா நடவடிக்கையும் முடிந்த பிறகு நேற்று கோர்ட்டில் மாயக்கண்ணன் சரண் அடையுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி அவரும் நேற்று விருதுநகர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
இவ்வாறு முத்துஇருளாண்டியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story