திருச்சி வந்த விமானத்தில் மடிக்கணினி சார்ஜரில் மறைத்து ரூ.41 லட்சம் தங்க கட்டிகள் கடத்தல்


திருச்சி வந்த விமானத்தில் மடிக்கணினி சார்ஜரில் மறைத்து ரூ.41 லட்சம் தங்க கட்டிகள் கடத்தல்
x
தினத்தந்தி 5 March 2018 4:15 AM IST (Updated: 5 March 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி வந்த விமானத்தில் மடிக்கணினி சார்ஜரில் மறைத்து ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்தி வந்த சென்னை பயணி சிக்கினார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, மடிக்கணினி சார்ஜரில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அவர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஹைதர் அலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து சார்ஜரில் மறைத்து சிறு, சிறு கட்டிகளாக கடத்தி வரப்பட்ட மொத்தம் 1,350 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.41 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story